பக்கங்கள்

முன்பை போலவே .....

ஒரு சிறிய
அலட்சியத்தின் வழியே
கடந்துசெல்ல முடிந்திடும்
மணித்துளிகளின் எண்ணிக்கைகள்
குறைந்து கொண்டே
வருகின்றன....

இங்கே
எதனையும் எப்பொழுதும்
இயல்பானதாய் - அதனதனாய்
விட்டுவிட்டு - கடக்கவே
முடிவதில்லை

அனைத்திலும் பொதிந்திருக்கும்
அதற்குறித்தனவல்லாத ஏதோ
ஒன்றினை தேடிக்கொண்டே
அலைகின்றன
மனதின் கண்கள்

அதனால்தானோ என்னவோ
இப்பொழுதெல்லாம்
எதனையும் இயல்பாக
கடக்க முடிவதேயில்லை
முன்பை போலவே
--பிரியா 

8 கருத்துகள்:

  1. எதுவென்றாலும் தேடல் தொடர வேண்டும் - அமைதியாக... பொறுமையாக...

    பதிலளிநீக்கு
  2. அருமை! வாழ்த்துக்கள்! தேடல்களின் முடிவில் நல்லது கண்டிப்பாய் கிடைக்கும்!

    பதிலளிநீக்கு
  3. மனம் ஒரு குரங்கு என்பது, அதன் கண்கள் எப்போதும் தேடிக் கொண்டே இருப்பதால் தானோ?

    பதிலளிநீக்கு