பக்கங்கள்

சிதறல் - 15

நிரம்பாத...
--------------

நேற்றைய மழைக்கு
முற்றத்தில் வைத்திருந்த
பாத்திரங்கள் அனைத்தும்
நிரம்பி விட்டன - ஆயினும்
இன்னமும் இருக்கிறது
நிரப்பப்படாத பானைகள்
வீட்டினுள்...


மழை சுத்தம்
--------------------

நேற்றைய மழையால்
தெரு முழுவதும்
சுத்தமானதாய்
பேசிகொண்டனர் அனைவரும்
எனக்கு தெரியும்
அது நிச்சயமாய்
அனைத்தையும் கழுவி செல்லவில்லையென்று.....


நானும்...
-------------

ஒரு
மழை நாளின் இறுதியில்
அவள் யாரிடமும்
எதுவும் சொல்லாமல்
திடீரென சென்றுவிட்டாள்....
அவள் ஏன்
அப்படிச் சென்றாள்
நீண்ட நேரத்திற்கு
யோசித்துக் கொண்டேயிருந்தேன்
ஒரு நாள்
நானும் கூட
அப்படிச் செல்லக் கூடும்....


மறைந்த..
--------------
ஊமையாகிப் போன
மழையின் வார்த்தைகளைத்
தேடிக் கொண்டிருக்கிறேன்
எனக்கு மட்டும்
கேட்கும் வகையிலேனும்
அது பேசக்கூடும்....


--பிரியா

5 கருத்துகள்:

 1. பெருஞ்
  சத்தங்களை
  சுமந்தே
  சூழ்ந்திருக்கிறது
  மழைச்சாரல்
  என்றேனும்
  விரைவில் வரும்
  பேசுவதற்கு,,

  -வாழ்த்துக்கள்-

  பதிலளிநீக்கு
 2. வணக்கம்
  இரசித்தேன்
  குறுங்கவிகள் அருமையாக உள்ளது பகிர்வுக்கு நன்றி

  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  பதிலளிநீக்கு
 3. நேற்றைய மழையால்
  தெரு முழுவதும் சுத்தமானதாய்
  பேசிக்கொண்டனர் அனைவரும்.
  எனக்குத்தெரியும்
  அது நிச்சயமாய்
  அனைத்தையும் கழுவிச்செல்லவில்லையென்று...''///

  superb... நீண்ட நாட்களுக்குப்பிறகு வலைத்தளத்திற்கு வந்திருப்பதால் உங்களுடைய பல சிதறல்களை நான் மிஸ் பண்ணியிருக்கிறேன். அனைத்தையும் படிக்கவேண்டும்...
  இந்தக்கவிதை மிக மிக அருமை... வித்தியாசமான கோணத்தில் சிந்தித்த யதார்த்தம்...

  பதிலளிநீக்கு