பக்கங்கள்

சிதறல் - 16

ஒரு இலையாய்
-------------------------

நான்
முன் ஜென்மத்தில் - ஒரு
இலையாய் இருந்திருக்கக்கூடும்
எப்பொழுதும்
எதனுடனாவது ஒட்டிக்கொண்டேX
காற்றில் அலைந்தபடி....

                            ---X---

ஒரு கணக்கு
---------------------

நானென்பது
எத்தனை நானென்று
கணக்கிட்டுக்கொண்டே இருக்கிறேன்
எண்ணிக்கை முடிந்தபாடில்லை....

                           ---X---

என்னுள் 
-------------

விட்டுக்கொடுக்கவும் இயலாத
தொட்டுக்கொள்ளவும் இயலாத
எண்ணங்களைக் கொண்ட
வினோத கலவையொன்று
செயல்படுகிறது என்னுள்
என்னை இயக்கியபடி.....

                          ---X---

மரத்தினிடையில் 
----------------------------

அடர்ந்த மரங்களுக்கிடையில்
என்னை ஒழித்துக்கொள்கிறேன்...
சில மரங்களில்
கிளைகள் மட்டுமே அதிகம்
தண்டுகள் - அத்தனை
பெரிதாய் இருப்பதில்லை...--பிரியா 

10 கருத்துகள்:

 1. வினோத கலவைகளை ரசித்தேன்... தொடர வாழ்த்துக்கள்...

  பதிலளிநீக்கு
 2. அருமையான கலவை கவி சகோ வாழ்த்துகள்
  தமிழ் மணம் 2

  பதிலளிநீக்கு
 3. சிறப்பான குறுங்கவிதைகள்! அழகு! அருமை! வாழ்த்துக்கள்!

  பதிலளிநீக்கு
 4. அருமை தோழி... பெண்களுக்கே உண்டான தனிச்சிறப்பு ஒளிர்கிறது... தொடர்ந்து எழுதுங்கள்

  பதிலளிநீக்கு