பக்கங்கள்

இந்தியா பெண்களுக்கான தேசமா?


இரண்டு மாதங்களுக்கு முன்பு நான் ஒரு கேள்வி என்ற பெயரில் பெண்ணிய கவிதை ஒன்றை எழுதி இருந்தேன்... அந்த கவிதைக்கு இங்கே எதிப்புகள் எதுவும் இல்லை என்றாலும் முகநூலில் மிகப் பெரிய அளவில் எதிர்ப்பை சந்தித்தேன்... நான் ஏதோ இல்லாத ஒன்றை கவிதையாய் கர்ப்பனையில் வடித்தது போல.

யாருக்காக யாரை நினைத்து ஏழுதினேனோ அந்தப் பெண் வர்க்கத்தை சார்ந்தவர்களிடமே எதிர்ப்பை சம்பாதித்தது அவர்களுக்கு என் எழுத்தின் உண்மையைப் புரிய வைக்க மிகப் பெரிய பிரம்ம பிரயத்தனம் செய்ய வேண்டி இருந்தது... இதற்க்கும் அக்கவிதையின் மிக முக்கிய கருப்பொருள் வரதட்ச்சணைக் கொடுமையும் பெண்களின் அடிமை நிலையுமே ஆகும்.


இதை இப்பொழுது இங்கே பகிர காரணம் இணையத்தில் இன்று பார்த்த B.B.C ன் India a Dangerous Place to be a woman என்ற ஒரு மணி நேர டாகுமென்ட்ரி. இந்த படத்தைப் பார்க்கையில் எனக்கு அந்த நினைவுகள் மீண்டெழுந்து வந்தன அதனால்தான்.. கீழே அதனுடைய வீடியோ லின்க் கொடுத்துள்ளேன் உங்கள் நேரத்தின் ஒரு மணித் துளியை நிச்சயம் நீங்கள் இதற்க்காக செலவு செய்யலாம் தவறொன்றும் இல்லை..





இதில் உரைத்துள்ள விடயங்களில் ஒன்றினைக் கூட மனசாட்சி உள்ள யாராலும் மறுக்க இயலாது. இந்த ஆவணத்தின் ஆரம்பப் பகுதியில் டெல்லி நகர வீதி ஒன்றினில் இங்கே தெரியும் இந்த பெண் தன் இந்தியத் தோழியுடன் நடந்து செல்கையில் அந்த இந்தியத் தோழி சில விடயங்களை இவளுடன் பகிர்வாள் அதை கவனித்துக் கேளுங்கள். ஒரு பெண் இதை கேட்க்கையில் நிச்சயம் அவள் வாழ்வின் ஏதேனும் ஒரு கணம் அவளுக்கு நியாபகம் வந்தே தீரும் தீராத காயங்களுடனோ ஆராத கோபங்களுடனோ.காரணம் வீட்டிலிருந்து வெளியே செல்லும்  ஒவ்வொரு பெண்ணும் அப்படியான ஒரு கணத்தை ஏதேனும் ஒரு நாளிலோ அல்லது நிதமுமோ கடந்தே தீர வேண்டி உள்ளது.

இதைக் காண்பவர்கள் யாராக இருப்பினும் கண்களில் நீரின்றி இதை முடிக்க முடியாது. ஒரு நல்ல தாயாய், சகோதரியாய், மகளாய், சிறந்த தோழியாய் பெண்ணை உணர்ந்த உணர்கின்ற ஒவ்வொரு ஆணையும் நிச்சயம் இது உலுக்கிச் செல்லும். பார்த்துவிட்டு கருத்துக்களை பகிருங்கள். டாகுமென்ட்ரி முடிகையில் எனக்குள் தோன்றிய வார்தைகள் இவைகள் தாம்...

" ஏ சமுதாயமே! பெண்களாகியா நாங்கள் உன்னிடம் கேட்ப்பது ஒன்றே ஒன்றுதான், எங்களை கடவுளாக்கி பூஜிக்க வேண்டாம், தேசங்களையும் நதிகளையும் பெண்களாக உருமாற்றி எங்களுக்கு பெருமை சேர்த்திட வேண்டாம்...நாங்கள் கேட்பதெல்லாம் ஒன்றே ஒன்றுதான் எங்களை வாழ விடுங்கள்..எங்கள் வாழ்க்கையை முழுமையாக வாழ விடுங்கள் அவ்வளவே"

காளியும் கூட
கருவரை தாண்டி
காலடி வைத்தால்

காமுகன் கண்ணில்
அகப்பட்டுப் போவாள்
சீர்கெட்டுப் போவாள்

ஆகையால் சொல்கிறேன்

வாராதே வாராதே
காளியே வெளியில்
மாறாதே மாறாதே
கற்ச்சிலை வடிவினின்றும்  

ஊரினை நீயே
காத்திடும் முன்
உன்னையே நீயும்
காத்திடல் வேண்டும்...


-- பிரியா


24 கருத்துகள்:

  1. உங்கள் உணர்வு புரிகிறது... பெண்ணிற்கு பெண்ணே எதிரி என்பதும் உண்மை...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உண்மைதான் தனபாலன் சார்... முதலில் சில மூத்த பெண்களிடம் தான் போராட வேண்டி உள்ளது

      நீக்கு
  2. ஊரினை நீயே
    காத்திடும் முன்
    உன்னை நீயும்
    காத்திடல் வேண்டும்...!

    கடவுளுக்கும், காவல் இல்லா வாழ்க்கை ,,,,,,,,! பெண்ணென்றால் பேயும் இரங்குமாம் இங்கு பெண்களுக்கு பெண்களையே பிடிக்காமல் போகிறது சில நேரங்களில்

    அருமையானதும் அவசியமானதுமான பதிவு பிரியா
    தொடரட்டும் வாழ்த்துக்கள்...!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இன்றைய நிலை அதுதான் அண்ணா... மிக்க நன்றி நிச்சயம் தொடர்கிறேன்...

      நீக்கு
  3. உண்மைதான்.... அருமையான அவசியமான கட்டுரை... பலரையும் இது நிச்சயம் சென்றடையவேண்டும்...

    பதிலளிநீக்கு
  4. பெண்ணிற்கு பெண்ணே எதிரி என்பது உண்மைதான்...
    கண்டிப்பாக வீடியோவைப் பார்க்கிறேன்....

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பென்ணடிமை நிலை தனில் நீங்கள் சொன்னது உண்மை.. ஆனால் வீடியோவில் உள்ள காட்சிகளுக்கு பொறுப்பு பெண்கள் அல்லவே...

      நீக்கு
  5. சரியாச் சொன்னீங்க... பெண்களை மிக உயரத்துல தூக்கி வெக்கவும் வேண்டாம்... ஒரேயடியா கீழபோட்டு நசுக்கவும் வேண்டாம். சகஜீவியா மதிச்சாலே போதும்..! உண்மையில் மனதினை ஒரு வேதனை பிசைவது நிஜம்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அதேதான் சார்.... சமூகத்திடம் அதையேதான் கேட்க்கிறோம் நாங்கள் நாங்களாகவே வாழ்கிறோம் விட்டு விடுங்கள் என்று... நாங்கள் ஒன்றும் விளையாட்டு பொம்மைகள் அல்ல என்று...

      நீக்கு
    2. பாலகணேஷ் சாரின் கருத்துகளை நான் வழிமொழிகிறேன். அதே சமயம் என் சுதந்திரம் என் உரிமை என்று சில பெண்கள் செய்யும் அட்ராசிட்டிகளையும் பார்த்திருக்கிறேன். எல்லாவற்றையும் மேற்கிலிருந்து கற்றுக் கொள்ளும் நாம் பெண்களை மதிக்கவும் கற்றுக் கொள்ள வேண்டும்.

      நீக்கு
    3. உண்மைதான் சார்... அதைக் குறித்தும் நான் முன்பொருமுறை கூறி இருக்கிறேன் சில பெண்கள் செய்யும் செயல்களைப் பார்க்கையில் அவர்களின் முன்பு ஆணுரிமை வேண்டி போரட்டம் நடத்த வேண்டும் என்று... ஆனால் இந்த வீடியோ லின்கில் உள்ள காட்சிகள் நிச்சயம் பெரும்பான்மையாக அப்பாவிப் பெண்கள் எவ்வாறு பாதிக்கப் பட்டு உள்ளனர் என்று அறிய முடியும்... தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சார்.. :)

      நீக்கு
  6. உங்கள் உணர்களை புரிந்து கொள்கிறேன் பெண்ணுக்கெதிரான கொடுமைகளுக்கு நானும் எதிர்ப்பு தெரிவிக்கிறேன்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி தமிழ் பிரியன்... அனைவரும் இணைந்து போராட வேண்டிய விடயம் இது

      நீக்கு
  7. வணக்கம் சகோதரி உங்கள் கருத்துக்கள் நியாயமானதுதான் இன்றைய சூழ்நிலையில் இந்தப்பதிவு அவசியமானதாகிறது

    பதிலளிநீக்கு
  8. "எங்களை வாழவிடுங்கள் எங்கள் வாழ்க்கையை முழுமையாக வாழவிடுங்கள்" என்று் கேட்கும் அளவிற்குசிலர் நடந்து கொள்கிறார்கள் என்பதே வருத்த த்திற்குரியதுதான்.. என்று மாறுமோ இந்நிலை

    பதிலளிநீக்கு

  9. நியாயமான கருத்தும் அதற்கேற்ப அழகான கவிதையும்

    ஊரினை காத்திடு முன்
    உன்னையே நீ காத்திடல் வேண்டும் அருமை...! அருமை....!
    வாழ்த்துக்கள்.....!

    பதிலளிநீக்கு