பக்கங்கள்

ஒரு சாலையில்...



வழி நெடுக வாசம்பூசி
வர்ணம் பொங்க வாழ்த்துக்கூறி
வரவேற்ப்பிசைக்கும் சின்னப் பூக்கள்

கொஞ்சி கொஞ்சி கீதமிசைத்து
நெஞ்சைத் தொட்டுச் செல்லும்
கொஞ்சல் பறவையின் கெஞ்சல்

நின்றாலும் சென்றாலும் எதுவாகினும்
என்னுடனே தொடர்ந்து வந்திடும்
எண்ணாயிரம் சூரியக் கதிர்கள்

கரையும் கற்பூர வெண்மையும்
கரைகின்ற காக்கையின் கருமையுமாய்
கவிழ்ந்து செல்லும் மேகக்கூட்டம்

அறிந்தவர் தெரிந்தவர் என்றில்லாமல்
அகமும் புறமுமாய் இணைந்து
அழகாய் புரியும் கனிவுப்பார்வை

கடந்து செல்லும் மரங்களின்
கிளைகளைத் தடவிச் செல்லும்
கள்ளமற்ற சிநேகக் காற்று

எல்லாம் நிறைந்த சாலையொன்றில்
ஏதோ ஒன்றைத் தேடியவாறே
எந்தன் பயணம் முடிவுகளின்றி...


--பிரியா

8 கருத்துகள்:

  1. பாதைகள் உள்ளவரை
    பயணங்களும் தொடர்ந்திடுமே...

    அருமையான வரிகள். அழகான சிந்தனை! வாழ்த்துக்கள்!

    பதிலளிநீக்கு
  2. பயணங்கள் முடிவதில்லை - அது ரசனையுடன் கூடியதாக இருந்தால் இனிமையும் சேர்கிறதுதானே! சூப்பர் கவிதை!

    பதிலளிநீக்கு
  3. மீண்டும் தொடரட்டும் நிம்மதி கிடைக்கட்டும்

    பதிலளிநீக்கு
  4. பயணம் தொடரட்டும், நிம்மதி, இனிமை நிறைந்ததாய் இருக்கட்டும்...

    பதிலளிநீக்கு