பக்கங்கள்

ஓநாயும் ஒரு சரீரமும் - மகளிர்தினத்திற்க்காக


ஓநாயால் குதறப்பட்ட - அழகிய 
சரீரமொன்றைக் கண்டேன்
ஒரு நாள் !

ஏராள குரல்கள் ஒலித்தன 
வீழ்ந்து கிடந்த
சரீரத்தைச் சுற்றிலும்... 

ஓநாய் குதறியதான் காரணம் என்ன?
விவாதித்தன குரல்கள் 
தத்தம் பாணியில் 

"உடை" என்றது  ஒரு குரல் 
"நேரம்" என்றது  ஒரு குரல் 
"அழகு" என்றது  குரல் 
"அலங்காரம்"என்றது ஒரு குரல்

இத்தனை குரல்களிடையே, 

குதறிய "ஓநாயைப்" பற்றியும்
பேசியது ஒரு குரல் 
பாவம் அது கூச்சல் குழப்பத்தில்  
மறைந்தது காற்றுடன் கலந்து ...

"சரீரம் எத்தனை அடி
சரீரத்தின் உடை என்ன 
சரீரத்தின் நிறம் என்ன"
ஆராய்ந்து ஆராய்ந்து - உலகிற்கு 
உரைத்தபடி சில குரல்கள் ...

அனைவரையும் அடக்கி அசரீரி ஒலித்தது 
"அடப் பிணந்தின்னிப் பேய்களே!
ஆராய்ந்தது போதும் சரீரத்தை 
பிடியுங்கள் அந்த ஓநாயை
மற்ற சரீரங்களாயின் தப்பிக்கலாகட்டும்!"

இரத்தவெறியேறிய கண்களுடன்
கூட்டத்தைப் பார்த்து 
குரூரமாய் சிரித்தது 
மறைந்திருந்த ஓநாய்!



--பிரியா 


இன்று உலக மகளிர் தினம்... இத்தினத்தில் அனைவருக்காகவும், எனக்காகவும்.....


16 கருத்துகள்:

  1. ஓநாய்கள் ஓய்வதில்லை! கசப்பான நிஜம் அதுதான்! நிதர்சனத்தை தெள்ளென உரைத்து மனதை கனகக வைத்தது கவிதை! இனிவரும் மகளிர் தினங்களிலாவது இதுபோன்ற நிலையை கவிதையாக எழுதாத வண்ணம் சூழ்நிலை மாறட்டும்... ஓநாய்கள் அழியட்டும்! இனிய மகளிர்தின நல்வாழ்த்துகள்மா!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மாறும் சூழ்நிலைக்காகவே காத்திருக்கிறோம் அண்ணா... ஒவ்வொரு மகளிர் தினத்திலும்...

      நீக்கு
    2. சூழ்நிலைகள் மாறாத வரையில் வெறும் வாழ்த்துக்களை மனதால் ஏற்றுக் கொள்ள முடிவதில்லை... :(

      நீக்கு
  2. ஓநாய்கள் வாழ்ந்து கொண்டுதான் இருக்கின்றன இன்னும் சுதந்திரமாய்...
    இனிய மகளிர் தின வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சூழ்நிலை இப்படியே இருந்தால், ஒரு கட்டத்தில் அவை மட்டுமே வாழும்...

      நீக்கு
  3. ஓநாய்கள் ஓயும் வரை
    பெண்களுக்கு இல்லை சுதந்திரம்...


    உலகநிகழ்வு இப்படித்தான் இருக்கிறது....

    விடியும் ஒருநாள்...
    மகளிர் தின வாழ்த்துக்கள்...

    பதிலளிநீக்கு
  4. மனித உருவில் உலவும் ஓநாய்கள் இருக்கத்தான் செய்கின்றன..

    பதிலளிநீக்கு
  5. சர்வதேச மகளின் தின நல்வாழ்த்துக்கள் - என்றும்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கொண்டாட்டத்திற்க்கான ஒரு நாள் நிச்சயம் வரும் என்ற நம்பிக்கையில்... நன்றி சார்... )

      நீக்கு
  6. உண்மைதான்! ஓநாய்களை பிடிப்பதை விட்டு இப்படி பேசுவதால் என்ன பயன்? அருமையான கவிதை! வாழ்த்துக்கள்!

    பதிலளிநீக்கு
  7. இனிய மகளிர் தின நல்வாழ்த்துக்கள் பிரியா
    நாளை மாறும் இன்றைய நிலை வாழ்க வளமுடன்
    5

    பதிலளிநீக்கு
  8. கீழுள்ள இரு பதிவுகளின் படி செய்தால் முகநூல் கருத்துப்பெட்டி வந்து விடும்... மேலும் சந்தேகம் இருந்தால் தொடர்பு கொள்ளவும்... நன்றி... dindiguldhanabalan@yahoo.com / 09944345233

    http://www.bloggernanban.com/2012/06/create-facebook-application.html

    http://www.bloggernanban.com/2012/07/Add-facebook-comment-box-on-blogger.html

    பதிலளிநீக்கு
  9. ஓநாய்களின் எண்ணிக்கை அதிகமாகிக் கொண்டே போகிறது.. விடியும் என்ற நம்பிக்கையும் விரயமாகிக்கொண்டே இருக்கிறது.. ஓநாய்கள் திருந்துமென இனியும் நம்ப வேண்டாம்.. உங்களைக் காக்க நீங்களே ஆயுதமெடுங்கள்.. கடிக்க வரும் ஓநாயை குத்திக் கொன்றுவிடுங்கள்.. ஒரு வேலை.. ஒரு ஓநாயின் கோர சாவு மற்ற ஓநாய்களுக்கு எச்சரிக்கை மணியாய் இருக்கும்... வாழ்த்துக்கள் பிரியா...

    பதிலளிநீக்கு